ADDED : ஜூன் 04, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே தானிமூலா பகுதியில், கொட்டகையில் கட்டி இருந்த ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலுார் அருகே குந்தலாடி தானிமூலா பகுதியை சேர்ந்தவர் ஏகாந்தராஜா. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து, ஆடுகளை வளர்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த, ஐந்து ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி கொன்றது தெரிய வந்தது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனச்சரகர் ரவி தலைமையிலான வனக்குழுவினர் நேரில் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க உறுதி அளித்துள்ளனர்.
