/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேட்பு மனு தாக்கல் நிறைவு 30ம் தேதி வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ADDED : மார் 28, 2024 05:22 AM
ஊட்டி : நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் நடந்தது. நேற்று, 3:00 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30ம் தேதி போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுகின்றனர். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
33 பேர் வேட்பு மனு
அதன்படி, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, 'பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 17 சுயேட்சைகள்,' என, 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த, 33 வேட்பு மனு தாக்கலில் டம்மி வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். 30ம் தேதியில் வெளியிடப்படும் இறுதி வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படுகிறது.