/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
ADDED : மார் 04, 2025 12:19 AM
ஊட்டி,; ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, மார்க்கெட் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பயன்பாடு குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா திடீர் ஆய்வு செய்தார்.
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு, 30,750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்ட கடைகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, பெருபாலான கடைகளில் துணி பைகள் மற்றும் பேப்பர் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில கடைகளில் மட்டும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறிந்து இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, டி.ஆர்.ஒ., சதீஷ், நகராட்சி கமிஷனர் ஸ்டேன்லி பாபு, தாசில்தார் சங்கர் கணேஷ் மற்றும் நகராட்சி நகர்நல அலுவலர் சிபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.