/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் மூங்கில் காட்டில் வன தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
/
கூடலுார் மூங்கில் காட்டில் வன தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
கூடலுார் மூங்கில் காட்டில் வன தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
கூடலுார் மூங்கில் காட்டில் வன தீ போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
ADDED : பிப் 27, 2025 03:22 AM

கூடலுார்: கூடலுார் அள்ளூர் வயல் பகுதியில் மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்தினர்.
கூடலுார் பகுதியில் நடப்பாண்டு துவக்கம் முதல், கோடை மழை ஏமாற்றி வருவதுடன், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வனப்பகுதிகளில் தாவரங்கள், செடிகள் கருகி வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வனத்தீ அபாயம் உள்ள பகுதிகளில், வனத்துறை தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மாக்கமூலா அல்லுார் வயல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென வனத்தீ ஏற்பட்டது.
மூங்கில்களில் எரிந்துடன், மற்ற பகுதிகளில் தீ பரவியது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் வீரமணி, தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் தாமஸ் மற்றும் பிற வீரர்கள், வன ஊழியர்கள் போராடி இரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் செக்ஷன்-17 நிலத்தில் ஏற்பட்ட தீ, கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அப்பகுதியில் மீண்டும் தீ ஏற்படாத வகையில் கண்காணித்து வருகிறோம்' என்றனர்.