/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மலர் கண்காட்சி 26ம் தேதி வரை நீட்டிப்பு: வெலிங்டன் ராணுவ கல்லுாரிக்கு முதல்வர் கோப்பை

ADDED : மே 21, 2024 01:23 AM
ஊட்டி;ஊட்டியில் நடந்த, 126 வது மலர் கண்காட்சி பரிசளிப்பு விழாவில், சிறந்த பூங்காவுக்கான முதல்வர் சுழற்கோப்பையை வெலிங்டன் ராணுவ கால்லுாரி வென்றது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 11 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதில், 37 சுழற் கோப்பைகள்; 135 முதல் பரிசு; 133 இண்டாம் பரிசு மற்றும் 80 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பூங்காவுக்கான போட்டியில் வெலிங்டன் ராணுவ கல்லுாரி, முதல்வர் சுழற் கோப்பையை வென்றது. 'புளூம் ஆப் தி ேஷா' கவர்னர் கோப்பை கன்னியாகுமரியை சேர்ந்த சசிக்குமார் பெற்றார்.
ஊட்டியில் நேற்று முன்தினம் ரோஜா கண்காட்சியும், நேற்று மலர் கண்காட்சியும் நிறைவடைந்தன.
ஆனால், மலர் கண்காட்சியை தோட்டக்கலை துறை நிர்வாகம் இம்மாதம், 26ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இம்மாதம், 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரோஜா பூங்காவில் சீசனுக்காக உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணம் தான் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலிட உத்தரவு வந்த பின் கட்டணம் குறைக்கப்படும்,''என்றார்.