ADDED : ஆக 06, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி படகு இல்ல பகுதியில் நடைபாதை பராமரிப்பு இன்றி உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணியர் குறிப்பாக, படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி சென்று மகிழ்கின்றனர். இங்குள்ள நடைபாதைகள் ஆங்காங்கே பெயர்ந்தும், பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. நடைபாதையில் சுற்றுலா பயணியர் நடந்து செல்ல முடியாமல், சாலையில் நடந்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சேதமான நடைபாதைகளை சீரமைக்க வேண்டும்.
