ADDED : ஆக 06, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அம்மா உணவகம் எதிரே அபாயகரமாக உள்ள, மின்சார ஒயரால் மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
பந்தலுார் பஜாரில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்த வழியாக அம்மா உணவகத்திற்கு மட்டுமின்றி, அரசு மருத்துவமனை, நீதிமன்றம், நகராட்சி அலுவலகம், அரசு துவக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மற்றும் மாணவர்கள் சென்று வருகின்றனர்.
அம்மா உணவகம் நுழைவாயில் பகுதியில், மின் ஒயர் மிகவும் தாழ்வாக, சிறு வயது மாணவர்கள் கூட தொடும் துாரம் உள்ளது. எனவே, மக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கும் முன் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
