ADDED : மார் 28, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் ஐ.டி.ஐ., பகுதியில் நேற்று மாலை வனத்தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். செடிகள், மரங்கள் சாம்பலாகின.
இவர்களுடன், குன்னுார் ஐ.டி.ஐ., மாணவர்களும் களத்தில் இறங்கி தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

