/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'
/
தெப்பக்காடு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 06, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வனவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், வனவராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர், யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள பணிகள் மட்டுமின்றி, யானை பாகன்கள் மற்றும் உதவியாளருக்கு புதியதாக கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், பணியில் மெத்தனமாக நடந்து கொண்டதாக கூறி, வனவர் சரண்யா சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாக, காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.