ADDED : ஜூலை 02, 2026 09:13 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, முன்னாள் ராணுவ வீரர், உடலில் வைத்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் செர்புளச்சேரி காந்திநகர், கலிகுன்னு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் நாராயணன்குட்டி,76. இவர், நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, வீட்டிலிருந்த சமையல் காஸ் சிலிண்டரின் குழாயை உடலுடன் சேர்த்து கட்டியவாறு, தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றி எரிவதை கண்ட பக்கத்து வீட்டினர், உடனடியாக காஸ் சிலிண்டரை அணைத்து, அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சம்பவத்தின் போது அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து செர்புளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
