/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்களுக்கு புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம்
/
பெண்களுக்கு புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம்
ADDED : பிப் 28, 2025 10:33 PM
பாலக்காடு,; கேரள மாநில சுகாதார துறையின் 'ஆரோக்கியம் ஆனந்தம், அகற்றலாம் புற்றுநோய்' என்ற தலைப்பில்ல, புற்றுநோய் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மையம், இந்திய மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பின் பாலக்காடு பிரிவு மற்றும் ஊராட்சி ஒருங்கிணைந்து, நாளை, 2ம் தேதி காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, நெல்லியாம்பதி கைகாட்டி பகுதியில் உள்ள, ஆரம்ப சுகாதார மையத்தில் முகாம் நடத்துகிறது.
முகாமில், 30 வயதுக்கு மேலான அனைத்து பெண்களுக்கும் இலவச மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
30 வயதிற்கு மேலான அனைத்து பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்றும், பரிசோதனைக்கு வருவோர் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என்றும், நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மைய சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன் தெரிவித்தார்.