/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் விதை சேகரித்து உரம் தயாரிக்கவும் முடிவு

ADDED : மே 29, 2024 09:59 PM

குன்னுார்:
குன்னார் பழ கண்காட்சியில் வடிவமைப்புக்காக பயன்படுத்திய பழங்களை விதை சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 64வது பழ கண்காட்சி கடந்த, 24 முதல் 26ம் தேதிவரை மூன்று நாட்கள் நடந்தது. 5.5 டன் அளவில் கொண்டுவரப்பட்ட அன்னாசி, ஆரஞ்ச், மாதுளம், திராட்சை, மாம்பழம், பலா பழங்களில், 'கிங்காங், வாத்து, டைனோசர், அலங்கார நுழைவாயில் உட்பட பல்வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்தப் பழங்களில் இருந்து விதைகள் சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்படாத பழங்களில் பழரசம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தாத நல்ல நிலையில் உள்ள, 400 கிலோ எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கவும், பயன்படுத்திய, 400 கிலோ எலுமிச்சை பழங்களில் இருந்து விதைகள் சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அழுகும் பழங்கள் சிறிது, சிறிதாக கொண்டு சென்று பூங்காவில் அமைக்கப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் குழியில் கொட்டப்பட்டு உரம் தயாரிக்கப்பட உள்ளது,' என்றனர்.