தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பவுர்ணமி சிறப்பு பூஜை பக்தர்கள் தரிசனம்

பவுர்ணமி சிறப்பு பூஜை பக்தர்கள் தரிசனம்

பவுர்ணமி சிறப்பு பூஜை பக்தர்கள் தரிசனம்


ADDED : ஆக 02, 2026 03:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 03:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி :

ஊட்டி அருகே, தொட்டபெட்டா அடுத்த சின்கோனா பகுதியில், வரம் தரும் மலையாள பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் விசேஷ நாட்களுக்கு வந்து செல்வார்கள். இந்தக் கோவிலில் வந்து மனமார வேண்டி வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஆடி பவுர்ணமி தினத்தை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜையை ஒட்டி, தொட்டபெட்டா சந்திப்பில் உள்ள வன கணபதி கோவிலில் இருந்து பூ கரகம், அலகு குத்தி , அக்னி சட்டி தீர்த்த குடத்துடன் கருப்பசாமி மற்றும் காளி வேடம் அணிந்து பக்தர்கள் கருப்பசாமி கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் ‌

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us