/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: ரூ. 20 ஆயிரம் அபராதம்
/
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்: ரூ. 20 ஆயிரம் அபராதம்
ADDED : ஏப் 27, 2024 12:31 AM

ஊட்டி;ஊட்டிக்கு சுற்றுலா வாகனத்தில் கொண்டுவந்த காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ளதால், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மாவட்டம், 65 சதவீதம் வனப்பகுதியாக இருப்பதால், சுற்றுலா வருபவர்கள் வெளியிடங்களில் சமையல் செய்து உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமையில், ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கர்நாடகா மற்றும் வேலுாரில் இருந்து வந்த சுற்றுலா பஸ்களில் சிலிண்டர் கொண்டுவந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆர்.டி.ஓ., தியாகராஜன் கூறுகையில்,''சுற்றுலா பஸ்சில் சிலிண்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை. திடீர் ஆய்வு மேற்கொண்டதில், இரு பஸ்களில் இரண்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.

