/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைபாதையில் அடிக்கடி பழுதடைந்து நிற்கும் அரசு பஸ்கள்
/
மலைபாதையில் அடிக்கடி பழுதடைந்து நிற்கும் அரசு பஸ்கள்
மலைபாதையில் அடிக்கடி பழுதடைந்து நிற்கும் அரசு பஸ்கள்
மலைபாதையில் அடிக்கடி பழுதடைந்து நிற்கும் அரசு பஸ்கள்
ADDED : மார் 04, 2025 11:15 PM
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில் அடிக்கடி ஆங்காங்கே பழுதடைந்து நிற்கும் பஸ்களால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது, 360 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், 165 பஸ்கள் மலை கிராமங்களில் இயக்கப்படுகின்றன. 93 பஸ்கள் 'விடியல்' பஸ்களாக இயக்கப்படுகிறது.
இங்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளதால், ஆங்காங்கே பழுதடைந்து நிற்பது தொடர்கிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவு, 9:30 மணிக்கு குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை, 11வது வளைவு பகுதியில், அரசு பஸ் பழுதாகி நின்றதால், 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இரண்டு பஸ்கள் டயர் பஞ்சராகி நின்றதால், பயணிகள் இறக்கிவிடப்பட்டு, நீண்ட நேரம் காத்திருந்து வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும், வாகனங்கள், கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
ஐகோர்ட் உத்தரவை மீறி, பயணிகளிடையே 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தை வசூலிக்கும் போக்குவரத்து கழகம், பஸ்களை உரிய முறையில் பராமரிக்காததால் இது போன்ற அவலம் தொடர்கிறது.
எனவே, மலை பகுதியின் முக்கியத்துவம் கருதி, சீசனுக்குள் புதிய பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.