/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றினால் பாதிப்பில்லை
/
அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றினால் பாதிப்பில்லை
ADDED : ஆக 20, 2024 02:05 AM
குன்னுார்;குன்னுார் சின்ன வண்டிச்சோலை கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் அருகேயுள்ள மலையில் சானிடோரியம் சாலையோரத்தில் உள்ள மழை நீர் கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பேரட்டி 'பிம்பிள்' எஸ்டேட் பகுதியில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லை. மழையின் காரணமாக பேரட்டிக்கு உட்பட்ட சானிடோரியம் முதல் சின்ன வண்டிச்சோலை வரை செல்லும் கால்வாய்களில் மழை நீர் செல்ல முடியாமல் தடம் மாறி செல்கிறது.
இங்கு வருவாய்த்துறை நிலம் ஆக்கிரமிப்பு செய்து அனுமதியின்றி தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
மழை நீர் சாலையில் செல்வதால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து உள்ளதுடன், கிராம பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சின்ன வண்டிச்சோலை கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். முதற்கட்டமாக கால்வாய் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

