/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி ஆண்டு விழா; கலை நிகழ்ச்சி அசத்தல்
/
அரசு பள்ளி ஆண்டு விழா; கலை நிகழ்ச்சி அசத்தல்
ADDED : மார் 06, 2025 09:32 PM

கூடலுார்; கூடலுார் புளியாம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தமிழ் ஆசிரியர் வனஜா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை, வகித்து ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன், பயிற்சி ஜ.எப்.எஸ்., சாய்சரண் ரெட்டி, பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், அரசு கல்லுாரி முதல்வர் சுபாஷினி, ரெப்கோ வங்கி முதன்மை மேலாளர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர்.
விளையாட்டு, கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் பேச்சு போட்டியில், 6வது இடம்பெற்ற மாணவி திவ்யா, ஆங்கில பேச்சு போட்டியில், 10வது இடம் பெற்ற மாணவி மேகலாஸ்ரீ ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் அசத்தினர். விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்மணி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரவல்லி, பெற்றோர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆசிரியர் ஷீலா நன்றி கூறினார்.