ADDED : மார் 28, 2024 11:01 PM
ஊட்டி,:தமிழக கவர்னர் ரவி ஐந்து நாட்கள் சுற்று பயணமாக நாளை ஊட்டி வருகிறார். சென்னையில் இருந்து விமானம் வாயிலாக கோவை வருகிறார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக, மாலை, 6:00 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வருகிறார்.
நாளை மறுநாள், புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு குறித்து பார்வையிடுகிறார். ஏப்., 1ல், ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். ஏப்., 2ம் தேதி குன்னுாரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்கிறார்.
ஏப்., 3ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு செல்கிறார். தொடர்ந்து, ஏப்., 4ம் தேதி காலை, 11:00 மணியளவில் ஊட்டி ராஜ்பவனிலிருந்து கார் வாயிலாக கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் வாயிலாக சென்னை செல்கிறார்.
கவர்னர் சுற்று பயணத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

