/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்
/
ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : மார் 11, 2025 05:28 AM
ஊட்டி : ஊட்டியில் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஓய்வூதிய சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து, பெறப்பட்ட, 25 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்த பின், கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:
மாவட்டத்தில், ஓய்வூதியதாரர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செலவினங்களை கோரி சமர்ப்பிக்கப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி' கோட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ காப்பீடு ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்பவர்களுக்கு, 'வாட்ஸ் அப்' செயலி மூலம் அனுப்பப்படும் குறைகளுக்கு, தகுந்த நிவர்த்தி அறிக்கையை வாட்ஸ் அப் செயலி மூலம், 24 மணி நேரத்திற்குள் தெளிவுரை அனுப்ப வேண்டும்.
மருத்துவ செலவினகளை மீளக் கோரும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கையை மாதந்தோறும் கருவூல கோட்ட மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியதாரர்களுக்கு, உள்ளாட்சித் தணிக்கை உதவி இயக்குனரால், குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி குறைகளுக்கு, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள், களஞ்சியம் மொபைல் ஆப்பில், தங்களது தனிப்பட்ட, வருமான வரி, மாத ஓய்வூதிய ரசீது விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறை இயக்குனரகத்தை சேர்ந்த, நிருபாராணி, மண்டல இணை இயக்குனர் பால்முருகன், கருவூல கணக்கு இயக்குனரக கண்காணிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.