/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சொத்துக்களுக்கான வழிக்காட்டி மதிப்பீட்டு குழு
/
சொத்துக்களுக்கான வழிக்காட்டி மதிப்பீட்டு குழு
ADDED : ஜூன் 15, 2024 12:28 AM
ஊட்டி:சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க, மதிப்பீடு செய்தல் வெளியிடுதல் மற்றும் திருத்தி அமைப்பதற்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி பதிவு மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில், வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட, முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் விபரங்கள், www.tnreginet.gov.in என்ற இணையதளமுகவரியில், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துகள் இருப்பின், 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான, மதிப்பீட்டு துணை குழுவிடம், கலெக்டர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.