/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வெள்ளை பூண்டு அறுவடை பணிகள் தீவிரம்; கிலோ ரூ.500 க்கு விற்பனை
/
ஊட்டியில் வெள்ளை பூண்டு அறுவடை பணிகள் தீவிரம்; கிலோ ரூ.500 க்கு விற்பனை
ஊட்டியில் வெள்ளை பூண்டு அறுவடை பணிகள் தீவிரம்; கிலோ ரூ.500 க்கு விற்பனை
ஊட்டியில் வெள்ளை பூண்டு அறுவடை பணிகள் தீவிரம்; கிலோ ரூ.500 க்கு விற்பனை
ADDED : ஆக 02, 2024 05:35 AM

ஊட்டி : ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டு தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாக உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதனால், மாவட்டத்தின் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான எம். பாலாடா, கொல்லிமலை ஓர நள்ளி, பி. மணிஹட்டி, கடநாடு, கார பிள்ளு மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளிலும் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மழை பொய்த்ததால் குறைந்தளவிலான வெள்ளை பூண்டு பயிரிடப்பட்டது. தற்போது, ஊட்டி சுற்றுவட்டாரத்தில் அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டுகளை விவசாய நிலங்களில் தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளது.
அதே சமயத்தில் சில பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளை பூண்டு அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது, விவசாயிகள் விளைந்த வெள்ளை பூண்டை அறுவடை செய்து, வாகனங்கள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மிக குறைந்த விலையில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஊட்டி மார்க்கெட்டில் ஊட்டி பூண்டு கிலோ, 500 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.