நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும், சுற்றுலா பயணிகளில் வருகை அதிகமாக உள்ளது. தவிர, கிராமப்புற மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். அதில், பல பயணிகள் ஏ.டி.சி., பஸ் நிறுத்தத்தில், பஸ்சிற்காக காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. இப்பகுதியில் கழிப்பிடம் இல்லாததால், ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள கடைகளின் அருகே உள்ள இடத்தை திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

