/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதியில் யானைகளின் உடல் நலம் கண்காணிப்பு
/
வனப்பகுதியில் யானைகளின் உடல் நலம் கண்காணிப்பு
ADDED : ஜூன் 05, 2024 09:50 PM
மேட்டுப்பாளையம் : மருதமலை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலம் குன்றி காணப்பட்டது. யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கோவை மாவட்ட வனச்சரகங்களில் யானைகளின் உடல் நலம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை, பாலப்பட்டி, காந்தையூர், பகுதிகளில் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் உலா வருவது வழக்கம். யானைகள் இப்பகுதிகளில் ஊருக்குள் வராமல் இருக்கவும், வனத்தில் உள்ள யானைகள் உடல் நலத்துடன் உள்ளதா எனவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில் சிறுமுகை வனப்பகுதிகளில் வனப்பணியாளர்கள் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்' என்றார்.---