/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்; காலை உணவு திட்ட ஆய்வின் போது கலெக்டர் அறிவுரை
/
பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்; காலை உணவு திட்ட ஆய்வின் போது கலெக்டர் அறிவுரை
பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்; காலை உணவு திட்ட ஆய்வின் போது கலெக்டர் அறிவுரை
பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்; காலை உணவு திட்ட ஆய்வின் போது கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 21, 2024 11:36 PM
ஊட்டி : 'காலை உணவு திட்டத்தில் உணவு வகைகளின் தரமும், குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்,' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் உள்ள, 300க்கு மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வாரத்தில் திங்கட்கிழமை உப்புமா வகை; செவ்வாய்கிழமையில் கிச்சடி வகை; புதன் கிழமையில் பொங்கல் வகை; வியாழக்கிழமையில் உப்புமா வகை; வெள்ளிக்கிழமையில் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், ஒரு நாளைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் அளவு, 50 கிராமாகும். ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கலாம்.
குறிப்பாக, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன்னுார் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் ஏராளமான ஆதிவாசி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
காலை உணவு திட்டத்தில், மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா, அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆய்வுக்கு செல்லும் போது, மாணவர்களுடன் அமர்ந்து தயாரிக்கப்பட்ட காலை உணவுகளை ருசி பார்த்து அவற்றில் உள்ள குறைகளை கூறி வருகிறார்.
கலெக்டர் கூறுகையில், 'காலை உணவு திட்டத்தில் உணவு வகைகளின் தரமும், பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம். ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன் வாடி மையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்குள்ள குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கேட்டறிந்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வகைகளை தவறாமல் வழங்கி அதற்கான நடவடிக்கையை திறம்பட மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.