திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 18, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நகராட்சி பகுதியில், திறந்த வெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி வாகனங்களில், ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு நேரடியாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர். எனினும், நகரின் சில பகுதிகளில், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.
குப்பைகளில் உணவு தேடி, கால்நடைகள் நகரில் உலா வருகிறது. இதனால், நகரின் சுகாதாரம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், ‘நகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை, தடுக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்,’ என்றனர்.
