/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கனமழை வாகனங்கள் தத்தளிப்பு
/
ஊட்டியில் கனமழை வாகனங்கள் தத்தளிப்பு
ADDED : ஜூன் 02, 2024 02:22 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று காலை, 11:30 மணி அளவில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழைக்கு, ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் அவதிப்பட்டனர்.
மழை ஓய்ந்த பின், வியாபாரிகள் தண்ணீரை வெளியேற்றினர். ஊட்டி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலைய பாலம் அடியில் சூழ்ந்த மழைநீரில் சுற்றுலா வாகனங்கள் சிக்கிக் கொண்டன. படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. மாவட்டம் முழுதும் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழைக்கு தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டிருப்பதால், தோட்டங்களை உரமிட்டு பராமரிக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மழைக்கு மலை காய்கறி தோட்டங்களில் விதைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று, புறநகர் பகுதிகளில் மழை பெய்யவில்லை.
ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணியர் மழையை ரசித்தவாறு மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர்.