ADDED : ஜூலை 27, 2026 05:11 PM
குன்னுார்: குன்னுார் வி.பி., தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் குணா பேசுகையில், ‘‘அறநிலைய துறையின் கீழ் உள்ள, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல்லாயிரக்கணக்கான கடைகள் மற்றும் மனைகளால் ஆண்டுக்கு, 1000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சபரிமலை உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும், கேரளா மாநில கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழகத்தில் ரத்து செய்வது அவசியம்,’’ என்றார்.
‘குன்னுாரில் உள்ள அறநிலைத்துறையின் விநாயகர் கோவில் சொந்தமான இடத்தில் மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது,’ என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்து முன்னணி நிர்வாகிகள் சீனிவாசன், ஹரிஹரன், ராஜேஷ், ரதீஷ், சசிக்குமார், சண்முகவேலு, இந்து வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
