தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மசினகுடி -ஊட்டி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு மீண்டும் தடை! சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

மசினகுடி -ஊட்டி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு மீண்டும் தடை! சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

மசினகுடி -ஊட்டி சாலையில் சுற்றுலா வாகனங்களுக்கு மீண்டும் தடை! சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு


UPDATED : ஜூலை 27, 2026 05:03 PM

ADDED : ஜூலை 27, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 05:03 PM ADDED : ஜூலை 27, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: ஐகோர்ட் உத்தரவின் படி, மசினகுடி, கல்லட்டி சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது; சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலுார், மசினகுடி வழியாக ஊட்டிக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுபடி மசினகுடி ,கல்லட்டி வழியாக சுற்றுலா வாகனங்கள் ஊட்டி செல்வதற்கு, கடந்த ஏப்., 28 முதல் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்தது. ஜுன், 20ம் தேதி முதல் இவ்வழியாக சுற்றுலா வாகனம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலாவை நம்பி இருந்த உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சோதனை சாவடி அமைப்பு இந்நிலையில், வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறை சார்பில் மாயார், சிங்காரா மற்றும் பொக்காபுரம், விபூதிமலை சாலைகளில் சோதனை சாவடி அமைத்து, உள்ளூர் மக்கள் மற்றும் அவர்களின் வாகனங்களை தவிர்த்து, சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் சபாரி ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தற்போது, ஐகோர்ட் உத்தரவுப்படி, மசினகுடி-கல்லட்டி சாலை வழியாக, சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு செல்ல மீண்டும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் தடை விதித்தது. இதை தொடர்நது, சீகூர் சாலையில் சோதனை சாவடி அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, தடையை நீக்க மசினகுடி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொருளாதாரம் பாதிப்பு மக்கள் கூறுகையில், 'இப்பகுதியின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்து உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி வனத்துறையினர், சிங்கார, மாயார் விபூதிமலை சாலையில் சோதனை சாவடி அமைத்து சுற்றுலா வாகனங்கள் சொல்ல தடை விதித்துள்ளனர். தற்போது, கல்லட்டி வழியாக சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளோம். எனவே, இநு்த உத்தரவை மறுபரிசலனை செய்து, இவ்வழியாக சுற்றுலா வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us