/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க செய்வேன்: அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
/
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க செய்வேன்: அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க செய்வேன்: அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க செய்வேன்: அ.தி.மு.க., வேட்பாளர் தகவல்
ADDED : ஏப் 16, 2024 12:43 AM

ஊட்டி:'நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு விரைவில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ, 30 ரூபாய் கிடைக்க முதற்கூட்டத்திலிருந்து அழுத்தம் கொடுப்பேன்,' என, அ.தி.மு.க., வேட்பாளர் தெரிவித்தார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் கூறியதாவது:
படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாக்குறுதி கொடுத்துள்ளேன். நான் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற பின், அந்த துறையின் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன்.
ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையை சுற்றியுள்ள எழில் மிகு இடங்களில்சுற்றுச்சூழல் மாசு படாமல் இருக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பேன்.
நீலகிரி தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை, கிலோவுக்கு, 30 ருபாய் கிடைக்க முதல் கூட்டத்தொடரில் இருந்து அதற்கு அழுத்தம் கொடுப்போன்.
மத்திய அரசு அறிவிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,
மேலும், மலை மாவட்டத்தில் நகர் பகுதிகளில் போக்குவரத்தை குறைக்க மாற்று திட்டங்களை கொண்டு வர அனைத்து முயற்சியும் நான் எடுப்பேன். குறிப்பாக, மலை மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும்கேபிள் கார் வசதி ஏற்படுத்த மத்திய மாநில அரசிடம் வலியுத்தப்படும்.
மேட்டுப்பாளையத்தில் பை பாஸ் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.
அந்த திட்டம் சார்ந்த கோப்புகள் சென்னையில் உள்ள என்.எச்.ஏ.ஐ., அலுவலகத்தில் தூங்கி கொண்டிருக்கிறது. அதை விரைவில் செயல்படுத்த நானும் முயற்சி எடுப்பேன்.
அவினாசி - பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் மூன்று பகுதிகளும் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளது. அதனை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பேன்.
இவ்வாறு, லோகேஷ் தமிழ்செல்வன் கூறினார்.

