/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்
/
தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்
தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்
தடுப்பணைக்குள் மூங்கில் துார் உடனே அகற்றுவது அவசியம்
ADDED : மே 23, 2024 04:48 AM

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணில் ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு தடுப்பணையில் கிடக்கும் மூங்கில் துாரை அகற்ற வேண்டும்.
கூடலுார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், தொரப்பள்ளி குணில்வயல் பகுதியில் உள்ள குணில் ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், கரையில் இருந்த மூங்கில் துார் விழுந்து, இழுத்து வரப்பட்டு ஆற்றின் தடுப்பணைக்குள் வந்து சேர்ந்தது. அப்பகுதியில், ஆற்று நீர் கடந்து செல்ல தடை ஏற்பட்டுஉள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் தொடரும் மழையின் போது, தடுப்பணை பகுதியில் காணப்பட்ட, மூங்கில் துார் இழுத்து வரப்பட்டுள்ளது.
இந்த துார் பாலத்தில் சிக்கி, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக தடுப்பணை பகுதியில் கிடக்கும் மூங்கில் துாரை அகற்ற வேண்டும்,' என்றனர்.

