/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் குரூப்-2 தேர்வு எழுதிய 2,391 பேர் 1194 பேர் 'ஆப்சென்ட்'
/
நீலகிரியில் குரூப்-2 தேர்வு எழுதிய 2,391 பேர் 1194 பேர் 'ஆப்சென்ட்'
நீலகிரியில் குரூப்-2 தேர்வு எழுதிய 2,391 பேர் 1194 பேர் 'ஆப்சென்ட்'
நீலகிரியில் குரூப்-2 தேர்வு எழுதிய 2,391 பேர் 1194 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : செப் 15, 2024 11:31 PM
ஊட்டி : நீலகிரியில் நடந்த குரூப்---2 தேர்வில், மூன்று மையங்களில், 2,391 பேர் எழுதினர்.
மாநில அரசுத் துறைகளில், 'உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உட்பட பல்வேறு குரூப்---2 பதவிகளில், 507 காலிப்பணியிடங்கள்; உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உட்பட பல்வேறு குரூப்--2ஏ பதவிகளில், 1,820 காலிப்பணியிடங்கள்,' என, மொத்தம், 2,327 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிபணியிடங்களுக்கு, மாநிலம் முழுவதும், 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில், குரூப்--2 தேர்வானது, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய, 3 தாலுகாகளில், 12 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத, 3,585 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை முழுவதுமாக கண்காணிக்கும் வகையில், 3 கண்காணிப்பு அலுவலர்கள்; 4 பறக்கும் படைக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல் ஆகிய பணிகளுக்காக, 7 குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு 'வீடியோ' பதிவு செய்யப்பட்டது.
இந்த தேர்வை எழுத, 3,585 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,391 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர். 1,194 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு நடக்கும் மையங்களை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

