/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாலையில் அதிகரிக்கும் மேகமூட்டம்
/
அதிகாலையில் அதிகரிக்கும் மேகமூட்டம்
ADDED : மே 12, 2024 11:52 PM

கூடலுார்:கூடலுாரில் அதிகாலை நேரத்தில் மேகமூட்டம் அதிகரித்துள்ளதால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு கோடை மழை ஏமாற்றி வந்தது. இதனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதிகள் பசுமை இழந்து காணப்பட்டன. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
மேலும், மக்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பாசன நீர் தட்டுப்பாடு காரணமாக விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல், மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
வெப்பம் தணிந்து மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிகாலை நேரங்களில் மேகமூட்டத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சிரமங்களை சந்தித்து வரும் ஓட்டுநர்கள் 'ஹெட் லைட்' பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர். நேற்று அதிகாலை மேகமூட்டம் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால், 'காலை 7:30 மணிக்கு மேல் சூரிய வெளிச்சத்தை பார்க்க முடிந்தது. பகலில் வெயிலின் தாக்கம் மாலை மற்றும் இரவின் கோடை மழை, அதிகாலையில் மேகமூட்டம்,' என, ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.