/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அனைத்து துறைகளுக்கு கணிதம் ஆதாரமாக உள்ளது' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
/
'அனைத்து துறைகளுக்கு கணிதம் ஆதாரமாக உள்ளது' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
'அனைத்து துறைகளுக்கு கணிதம் ஆதாரமாக உள்ளது' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
'அனைத்து துறைகளுக்கு கணிதம் ஆதாரமாக உள்ளது' அறிவியல் கருத்தரங்கில் தகவல்
ADDED : மார் 29, 2024 12:17 AM
ஊட்டி;ஊட்டி அருகே உள்ள மசினகுடி ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தற்போது, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை தொட்டுள்ளது. சில விஞ்ஞானிகள் 'அறிவியல் மதம்' என்ற ஒரு புதிய மதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும், பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக தான் உள்ளது. மனித மனம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மனித மூளையின் செயல்பாடுகள் தான். இன்றைய நவீன செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மனித மூளையின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்து அவற்றை ரோபோக்களின் மூலமாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பூமி, தற்போது சந்தித்து வரும் புவி வெப்பம், காலநிலை மாற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வை, அறிவியல் கண்டுபிடிக்க உள்ளது.
அறிவியல் தான் நம்புவதற்கு உரிய ஞானம். ஏனெனில், அறிவியல் நிரூபிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்மையாக ஏற்று கொள்கிறது. அனைத்து வகையான அறிவியல் மற்றும் பிற துறைகளுக்கு கணிதமே ஆதாரமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், ஜி.ஆர்.ஜி., பள்ளி மாணவர்களுடன், பொக்காபுரம், மசினகுடி பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி, குட்செப்பர்டு நடுநிலைப்பள்ளி, ராகவேந்திரா பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஜி.ஆர்.ஜி., ஆங்கிலப் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி செய்திருந்தார்.

