/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலைக்கு உரிய விலை கூட்டத்தில் வலியுறுத்தல்
/
தேயிலைக்கு உரிய விலை கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2024 03:08 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே ஒலிமடா கிராமத்தில் சிறு தேயிலை விவசாயிகள் கூட்டம், நிர்வாகி கந்தசாமி தலைமையில் நடந்தது.
அதில், 'தேயிலை வாரியம் பசுந்ேதயிலை கிலோவிற்கு, 18.72 ரூபாய் அறிவித்து உள்ளது. ஆனால், கூடலுார் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, 17 ரூபாய் வழங்கும் நிலையில், பந்தலுார், எருமாடு, பிதர்காடு ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 15 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
இதனால், சிறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தேயிலை வாரியம் அறிவித்துள்ள விலையை விவசாயிகளுக்கு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும்.
மாதாந்திர நிலுவை தொகையினை, 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

