/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்
/
மாவட்டத்தில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்
ADDED : மே 31, 2024 11:45 PM
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு முழுவதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணத்தால், கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, முள்ளங்கி மற்றும் பூண்டு உள்ளிட்ட மழை காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, தற்போது காய்கறியின் விலை அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், விளை நிலங்களை தயார் செய்து, கேரட் உள்ளிட்ட, மலை காய்கறியின் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி -அருகே தேனாடுக்கம்பை, முத்தோரை பாலாடா, குன்னுார் - பந்துமி பள்ளத்தாக்கு மற்றும் கோத்தகிரி - கூக்கல்தொறை, நெடுகுளா, ஈளாடா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பயிரிடும் மலை காய்கறிகளுக்கு, வரும் நாட்களில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூடுமான வரை கடன் பெற்று சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

