தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி குறித்து விசாரணை

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி குறித்து விசாரணை

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி குறித்து விசாரணை


ADDED : ஜூலை 09, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: முதுமலை மசினகுடி கோட்டம் சீகூர் வனபகுதியில் அம்மநாடு ஓடை பகுதியில், நேற்று முன்தினம், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அழுகிய நிலையில் புலி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

மசினகுடி துணை இயக்குனர் வித்தியாதர், வனச்சரகர்கள் விமல் மற்றும் வன அதிகாரிகள் இறந்த புலியின் உடலை நேற்று ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மசினகுடி அரசு கால்நடை டாக்டர் சுவேதா புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்த புலியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதன் பாலினம், வயது மற்றும் இறப்புக்கான காரணத்தை அறிய முடியவில்லை. ஆய்வுக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின், இறந்ததற்கான காரணம் தெரிய வரும்,’என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us