/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜனாதிபதி மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து தோடர் பெண்களுக்கு அழைப்பு
/
ஜனாதிபதி மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து தோடர் பெண்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து தோடர் பெண்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து தோடர் பெண்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 13, 2024 02:28 AM

ஊட்டி:டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் சுதந்திர தின தேநீர் நிகழ்ச்சியில் பங்கேற்க தோடர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் இம்மாதம், 15 ம் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேநீர் விருந்து அளிக்கிறார்.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பெட்டுமந்து பகுதியை சேர்ந்த தோடர் இனபெண் ஜெயமுத்து, ஊட்டி தமிழகம் மந்து பகுதியை சேர்ந்த திவ்யாசின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயமுத்து கூறுகையில்,''டில்லியில், 15 ம் தேதி நடக்கும் சுதந்திர தின தேநீர் நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும், ஊட்டி தமிழக மந்து பகுதியை சேர்ந்த திவ்யாசின் என்பவருக்கும், டில்லி ஜனாதிபதி மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது.
14ம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் டில்லி சென்று, 15 ம் தேதி நடக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளோம்,'' என்றார்.
நீலகிரியில் வாழும் தோடர்கள் தங்களின் மூதாதையர்களின் பழக்கம், பண்பாடுகளை இன்றளவும் பாதுகாக்கும் வகையில், தனித்துவமான போர்வைகள்; கைவினை பொருள்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்களின் கை வண்ணத்தில் உருவாகும், பூத்துகுளி எனப்படும் போர்வையில் காணப்படும் 'தோடர் எம்ப்ராய்டரி' உலகளாவிய சந்தையில் பிரபலமாகி உள்ளது.
இதற்கு புவிசார் குறியீடு பெற்றதற்காக, தோடர் பெண்கள், ஜெயமுத்து,தேஜம்மாள் ஆகியோருக்கு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 'மகளிர் சக்தி' விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

