/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.1.40 கோடி நிலுவை தொகை விரைவில் வழங்கினால் நிம்மதி
/
ரூ.1.40 கோடி நிலுவை தொகை விரைவில் வழங்கினால் நிம்மதி
ரூ.1.40 கோடி நிலுவை தொகை விரைவில் வழங்கினால் நிம்மதி
ரூ.1.40 கோடி நிலுவை தொகை விரைவில் வழங்கினால் நிம்மதி
ADDED : பிப் 21, 2025 10:35 PM
குன்னுார்; 'கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, அரசு வழங்க வேண்டிய,1.40 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,' என, சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குன்னுாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'இன்கோசர்வ்' கீழ், 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தேயிலை வாரியம் அறிவிக்கும் பசுந்தேயிலைக்கான நிர்ணய விலையை பெரும்பாலான தொழிற்சாலைகள், உறுப்பினர்களுக்கு முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட, 8 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்த ஆண்டு அக்., மாத விலையான, 24.49 ரூபாய் வழங்காமல், குறைத்து அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட தொழிற்சாலை உறுப்பினர்கள் பெருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''இன்கோ தொழிற்சாலைகளில், கடந்த நவ., மாதத்தில் இருந்து தேயிலை வாரிய நிர்ணய விலை முறையாக வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய, அக்., மாதத்திற்கான நிலுவை தொகையான, 1.40 கோடி ரூபாயை விரைவில் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், எம்.பி. ராஜாவை சந்தித்து இது குறித்து வலிறுத்தப்பட்டது. முதல்வரிடம் தெரிவித்து விரைவில் தீர்வு காண்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.

