/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட அரசு பஸ் வழித்தடங்கள் மீண்டும் இயக்கினால் பயன்
/
மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட அரசு பஸ் வழித்தடங்கள் மீண்டும் இயக்கினால் பயன்
மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட அரசு பஸ் வழித்தடங்கள் மீண்டும் இயக்கினால் பயன்
மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட அரசு பஸ் வழித்தடங்கள் மீண்டும் இயக்கினால் பயன்
ADDED : பிப் 28, 2025 10:24 PM
குன்னுார், ; 'நீலகிரியில், மினி பஸ்களுக்காக ரத்து செய்யப்பட்ட, 101 பழைய வழித்தடங்களில் மீண்டும் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தான் முதன் முதலில், பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், இங்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில், 2000ம் ஆண்டில், கிராமங்களில் இருந்து முக்கிய சாலை இணைக்கும் பகுதி வரையில் மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்காக மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஆகிய நகரங்களை ஒட்டிய பகுதிகளுக்கு மட்டுமே ஆரம்பத்தில், 101 மினி பஸ்களுக்குஅனுமதி வழங்கப்பட்டது. இதனால், இந்த வழித்தடங்களில் இயங்கி வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால், 'முக்கிய சாலையில் இருந்து மிகவும் உட்பகுதியில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த மினி பஸ்கள் இயக்க வேண்டும்,' என்ற அரசு உத்தரவு மீறப்பட்டுள்ளது.
இதனால், மலை கிராம மக்கள் இன்றளவும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மினி பஸ்கள் பாலாடா வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்நிலையில், பல புதிய வழித்தடங்களில் மினி பஸ்களுக்கு உரிமங்கள் வழங்குவதாக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராம மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் ஆரம்பத்தில் துவக்கி வைத்து, நஷ்டம் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிப்பதும், பெரும்பாலான மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், வழித்தட துாரத்தை குறைத்து இயக்குவதும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தின் பூகோள அமைப்பு மற்றும் மக்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு சற்றும் பொருந்தாத மினி பஸ்கள் அரசின் விதிமுறைகளை மீறுகின்றன. போக்குவரத்து துறை இதனை கண்டு கொள்வதில்லை.
ஏற்கனவே அரசு பஸ்கள் இயக்கப்பட்ட வழித்தடங்கள் மினி பஸ்களுக்கு வழங்கப்பட்டதால், இந்த தடத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்க போக்குவரத்து கழகம் மறுத்து வருகிறது.
தற்போது புதிதாக உரிமம் வழங்குவதை தவிர்த்து, 101 பழைய வழித்தடங்களில் மீண்டும் அரசு பஸ்கள் இயக்க வேண்டும். மலை கிராமங்களை இணைக்கின்ற வகையில் சுற்று பஸ்கள் இயக்க வேண்டும்,'' என்றார்.