ADDED : ஜூன் 02, 2026 11:00 PM
ஊட்டி: ‘நீலகிரி மாவட்டத்தில், இன்று (3ம் தேதி) துவங்கி, 5ம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் மக்கள் தங்களது கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு:
குந்தா வட்டத்திற்கு, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், 3 மற்றும் 4ம் தேதி; கோத்தகிரி வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலகத்தில், 3, 4 தேதி; குன்னுார் வட்டத்திற்கு, சார் ஆட்சியர் அலுவலகத்தில், 5ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.
அதே போல, ஊட்டி வட்டத்திற்கு, 3, 4 மற்றும் 5ம் தேதிகளில், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்; கூடலுார் வட்டத்திற்கு, 3, 4 ம் தேதிகளில், கூடலுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்; பந்தலுார் வட்டத்திற்கு, 3, 4ம் தேதிகளில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திலும் ஜமா பந்தி நடக்கிறது.
இந்த மூன்று நாட்கள் நடைபெறும் ஜமாபந்தியில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் தங்கள் கோரிக்கைகளை, வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
