/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 19க்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 19க்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 22, 2025 07:52 AM
கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, மார்ச், 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த, வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் நேரில் ஆஜராயினர்.
அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராயினர். சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் நேரில் வருகை புரிந்தனர்.
நீதிபதி முரளிதரன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர்போல் லிசாரணை அறிக்கை பெற, சேலம் நீதித்துறை நடுவர் மூலமாக நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், கூடுதல் அவகாசம் தேவை,' என, நீதிபதியிடம் அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம், 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.