/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 26, 2024 12:54 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனி செயின்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஆசிரியை யசோதா வரவேற்றார். பள்ளி தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜேந்திர சோழன், உதவி முதல்வர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி குறித்து ஆசிரியை கவிதா விளக்கினார். நிகழ்ச்சியில், எல்.கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்ணன், ராதை வேடங்கள் அணிந்து, பார்வையாளர்களை அசத்தினர். தொடர்ந்து, கீதாசாரம் வாசித்தல், தசாவதார வரலாறு ஆகிய நிகழ்வுகளை நடத்திக் காட்டினர். விழாவில், ஆசிரியைகள் நளினி, நிஷாந்தினி மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
இதில், எல்.கே.ஜி., மாணவ, மாணவியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தாளாளர் சித்ரா பங்கேற்று, அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கினார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

