/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாட்டில் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளித்த செவிலியருக்கு பாராட்டு
/
வயநாட்டில் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளித்த செவிலியருக்கு பாராட்டு
வயநாட்டில் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளித்த செவிலியருக்கு பாராட்டு
வயநாட்டில் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளித்த செவிலியருக்கு பாராட்டு
ADDED : ஆக 07, 2024 10:39 PM

பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு பேரிடரின் போது ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று, சிகிச்சை அளித்த தமிழக செவிலியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
--கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை பகுதியில், 30ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் காயமடைந்து பலர் உயிருக்கு போராடி வந்தனர். அன்று காலை சூரல்மலை பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர், அங்கிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து சென்ற நிலையில், முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது, கூடலுார் செவிடிப்பேட்டை பகுதியை சேர்ந்த சபீனா,40, என்ற செவிலியர் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தார். அவர் பெண் என்பதால் மீட்பு குழுவினர் ஆற்றை கடந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால், அவர் மறுகரையில் மரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் உதவியுடன் தைரியமாக சென்று, 40-க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சபீனா கூறுகையில்,''நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ஆற்றை கடந்த செல்ல யாரும் அனுமதிக்கவில்லை. காயங்களுடன் உயிருக்கு போராடும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், காட்டாற்று வெள்ளத்தை கயிற்றின் உதவியுடன் கடந்து சென்று, பலருக்கு சிகிச்சை அளித்தேன். இதற்கு அனுமதி அளித்த, நான் பணிபுரியும் நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.