/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி
/
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி
'கும்கி' யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி
ADDED : ஜூன் 25, 2024 11:17 PM

கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தொரப்பள்ளி, குணில், அள்ளூர், புத்துார்வயல் உள்ளிட்ட பகுதிகளில், முகாமிடும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
'காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,' என, வலியுறுத்தி, கிராம மக்கள் கூடலுார் டி.எப்.ஓ., அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், 'கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் விரட்டப்பபடும்,' என, டி.ஏப். ஓ., வெங்கடேஷ்பிரபு உறுதியளித்தார். அதனை ஏற்று மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
தொடர்ந்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து, கும்கி யானைகள் சீனிவாசன், சேரம்பாடி சங்கர் தொரப்பள்ளி பகுதிக்கு அன்று இரவு அழைத்துவரப்பட்டன.
இந்நிலையில், முதுமலை துணை இயக்குனர் வித்யா, டி.ஏப்.ஓ., வெங்கடேஷ்பிரபு மேற்பார்வையில், நேற்று காலை அள்ளூர் வனப்பகுதியில் முகாமிட்ட, 2 காட்டு யானைகளை, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 20 வன ஊழியர்கள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் அங்கிருந்து வேறு வனப்பகுதிக்கு சென்றன.
அப்பகுதியில் மழை அதிகரித்ததால், கும்கி யானைகள் தொரப்பள்ளிக்கு திரும்பின. வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.