/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் துர்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
/
குன்னுார் துர்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
குன்னுார் துர்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
குன்னுார் துர்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 01, 2024 12:24 AM

குன்னுார்;குன்னுார் துர்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
குன்னுார் வி.பி., தெரு மார்க்கெட் அருகே அமைந்துள்ள துருவம்மன என அழைக்கப்படும் துர்கையம்மன் கோவிலில் கடந்த, 29ம் தேதி மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி, துர்கா லட்சுமி ஹோமங்களுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, மூல மந்திர ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகாவியம் வாஸ்து சாந்தி ரக்ஷா பந்தனம், கும்ப ஸ்தாபனம் நடந்தது.
விநாயகர் கோவிலில் இருந்து சிவாச்சாரியர்கள் வழிபாடுகளுடன் மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலச ஊர்வலம் யாகசாலையை வந்தடைந்தது.
அங்கு துவார பூஜை, வேதார்ச்சனை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வராஹி அம்மன் மூல மந்திர ஹோமம், வேத பாராயணம் திருமுறை பாராயணம் நடந்தது.
தொடர்ந்து, துர்க்கை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சார்த்தப்பட்டது. நேற்று மங்கள இசை முழங்க துர்கையம்மன் அனைத்து தேவதை மூல மந்திரம், ரக்ஷா பந்தனம். நாடி சந்தானம் நடந்தது.
காலை, 10:30 மணிக்கு விமான கலச கும்பாபிஷேகம். கோபுர கலசாபிஷேகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்ப கலச அபிஷேகம், மகாபிஷேகம் ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்மன் திருக்கல்யாண உற்சவம்,மங்கள வாத்தியங்களுடன் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தது.
சர்வ சாதகங்களை திருப்பூர் குருமூர்த்தி குருக்கள் குழுவினர், கும்பகோணம் சந்திரசேகர சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

