/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம்: வாகனங்கள் செல்ல சிரமம்
/
குன்னுார் வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம்: வாகனங்கள் செல்ல சிரமம்
குன்னுார் வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம்: வாகனங்கள் செல்ல சிரமம்
குன்னுார் வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு அதிகம்: வாகனங்கள் செல்ல சிரமம்
ADDED : ஏப் 16, 2024 12:51 AM

குன்னுார்;குன்னுார் வி.பி., தெருவில், ஆளும் கட்சியினரால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
குன்னுார் வி.பி., தெரு பகுதி முன்பு லாரிகள் நிறுத்தும் இடமாக இருந்தது. அனைத்துக் கட்சி பொது கூட்டங்கள் இந்த பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் அமைக்கும் போது இங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் பிறகு சமீபத்தில் ஆறு துார்வாரப்படும் போதும் இந்தப் பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, சில ஆளும் கட்சியினரால் இங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே ஐகோர்ட் ஆற்றோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு உள்ள நிலையில், மீண்டும் இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
பொது மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் சமீபத்தில் ஆளும் கட்சியினர் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, சில கடைகள் அகற்றப்பட்டு மேடை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து கட்டுமானங்கள் நடந்து ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்த நகராட்சிக்கு பலமுறை புகார்கள் தெரிவித்தும் ஆளும் கட்சியினர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ஆக்கிரமிப்புகள் இரு புறங்களிலும் அதிகரித்துள்ள நிலையில் சாலை குறுகலாகி விட்டதால் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கி வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
மார்க்கெட்டில் பொருட்களை இறக்கச் செல்லும் லாரிகளை உள்ளே ஓட்டி செல்ல முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர். எனவே, வி.பி., தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

