/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் குடியிருப்பு; சாலை வசதி இல்லாததால் பாதிப்பு
/
தொழிலாளர் குடியிருப்பு; சாலை வசதி இல்லாததால் பாதிப்பு
தொழிலாளர் குடியிருப்பு; சாலை வசதி இல்லாததால் பாதிப்பு
தொழிலாளர் குடியிருப்பு; சாலை வசதி இல்லாததால் பாதிப்பு
ADDED : ஏப் 03, 2024 10:23 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடியிருப்புகளுக்கு செல்லவும் தேயிலை தோட்டங்களுக்கு செல்லவும் அமைக்கப்பட்ட தார் சாலைகள் முழுவதும், பெயர்ந்து குழிகளாக மாறி உள்ளது.
இதனால், வெளியில் இருந்து இந்த பகுதிகளுக்கு எந்த வாகனங்களும் வந்து செல்வதில்லை. பஜார் பகுதி சாலையிலிருந்து, 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள, குடியிருப்புகளுக்கு மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் வந்து செல்லும், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதுடன், இப்பகுதி நக்சல்கள் வந்து செல்லும் கேரளா மாநில வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு கண்ணம் வயல் என்ற இடத்தில் ஓட்டுச்சாவடி மையமும் அமைந்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் மட்டுமே அதிகாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைத்து தராமல், அப்படியே விடப்பட்டு உள்ளது.
இந்த சாலைகளை சீரமைத்து தர எஸ்டேட் நிர்வாகமும் முன் வராத நிலையில், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. சமீபத்தில் இங்குள்ள ஓட்டுச்சாவடி மையத்தை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் சென்றபோதுதான், சாலையின் நிலைகுறித்து அதிகாரிகளுக்கு தெரிய வந்து உள்ளது.
எனவே, இந்த சாலைகளை எஸ்டேட் நிர்வாகம் சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

