/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சட்டமன்ற ஆய்வு குழு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
/
சட்டமன்ற ஆய்வு குழு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
சட்டமன்ற ஆய்வு குழு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
சட்டமன்ற ஆய்வு குழு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 24, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுாரில் சட்டமன்ற உறுதிமொழி குழு ஆய்வின் போது, பஸ் ஸ்டாண்ட் சாலையில் நிறுத்திய அரசு வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுாரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுதி மொழி ஆய்வு குழுவினர் வருகை தந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோத்தகிரி, மேட்டுப்பாளையம் சாலைகளிலும், 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.