/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரகணி சாலையில் சிறுத்தை; தொழிலாளர்கள் அச்சம்
/
பேரகணி சாலையில் சிறுத்தை; தொழிலாளர்கள் அச்சம்
ADDED : செப் 12, 2024 08:37 PM
கோத்தகிரி : கோத்தகிரி பேரகணி சாலையில், பகல் நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் சமீப நாட்களாக, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் தேயிலை தோட்டங்களில் மறைந்து, அவ்வப்போது வெளியே வருவது தொடர்கிறது.
பெரும்பாலான நேரங்களில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி பேரகணி சாலையில் கடந்த சில நாட்களாக, சிறுத்தை நடமாடி வருகிறது. தேயிலை தோட்டத்தில் இருந்து, அவ்வப்போது சாலையில் உலா வரும் சிறுத்தையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு, பகல் நேரத்தில் நாயை கவ்வி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட பணிகளை அச்சத்திற்கு இடையே, மேற்கொண்டு வருகின்றன. எனவே, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நடமாடி வரும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.