/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
/
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : மார் 15, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் அருகே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தது தொடர்பாக, தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் பாபு,45.இவர் கடந்த, 2022ம் ஆண்டில், 17 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். புகாரின் பேரில், இவரை போக்சோ சட்டத்தின் கீழ் குன்னுார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.